கன்னியாகுமரி, ஆகஸ்ட் 20 :
நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் அவர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. ஸ்டாலின், IPS அவர்களுடன் இணைந்து அடிக்கல் நாட்டினர்.
பின்னர் சிறப்புரையாற்றிய அவர்கள், ஓய்வு பெற்ற காவலர்களின் நலனுக்காக இக்கட்டிடம் பெரும் பயனளிக்கும் என தெரிவித்தனர்.
அத்துடன், காவல்துறை அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற காவலர் கழக நிர்வாகிகள் மற்றும் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
கேமராமேன் ஜெனீருடன் குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
