திருப்பூர் உடுமலை அருகே இந்திரா நகர் பகுதியில் ஜிடிஎன் என்டர்பிரைசஸ் நூற்பாலை உள்ளது இங்கு தினமும் இரவு மற்றும் பகல் நேர நேரங்கள் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர் .இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் மின் கசிவு காரணமாக பஞ்சு மற்றும் பேல்கள் இருந்த கட்டிடம் பகுதியில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
இதனால் நூற்பாலையில் இரவு நேர பணியில் பணிபுரிந்த தொழிலாளர்கள் அங்கும் இங்கும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர் சுமார் 3 மணி அளவில் உடுமலை தீயணைப்பு துறை வீரர்கள் நூற்பாலைக்கு வந்த நிலையில் சுமார் 4 மணி நேரமாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டுள்ள தீயை அணைக்கும் பணிகள் தற்போது வரை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தீ விபத்து குறித்து தெரிந்து கொண்ட இரவு பணிக்குச் சென்ற உறவினர்கள் நூற்பாலை முன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது அப்போது தொழிலாளர்கள் குறித்து ஆலை நிர்வாகம் எந்த ஒரு தகவலையும் தெரிவிக்க மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது எனவே இரவு நேரத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் குறித்து ஆலை நிர்வாகம் உடனே தெரிவிக்க வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் முதல் கட்ட விசாரணையில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்து ஏற்றுமதி தயாராக இருந்த பல லட்சம் மதிப்புள்ள பஞ்சு மற்றும் பேல்கள் எரிந்து சேதம் ஆனதாக கூறப்படுகிறது. இதற்கு இடையில் தீ விபத்து நடைபெற்ற நூற் பாலையில் திருப்பூர் மாவட்ட பஞ்சாலை தொழிலாளர் சங்கம் மாவட்ட செல்வராஜ், மாவட்ட பொருளாளர் ஜெயபிரகாஷ் ,மாவட்டகுழு உறுப்பின நாகராஜ் ஆகியோர் நூற்பாலையில் ஆய்வு மேற்கொண்டு தீ விபத்து குறித்து கேட்டறிந்தனர்.
உடுமலை : நிருபர் : மணி