செப் 20, கன்னியாகுமரி
மார்த்தாண்டம் அருகே கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்களுக்கான அரசியல் பயிலரங்கு இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்து உரையாற்றிய கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் திரு. விஜய் வசந்த், தொண்டர்களின் பங்களிப்பு தான் கட்சியின் வலிமை என்றும், அடிப்படை நிலைகளில் அரசியல் விழிப்புணர்வு அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சசிகாந்த் செந்தில், இளைஞர்கள் அரசியலில் ஈடுபட வேண்டிய அவசியம் குறித்து உரையாற்றினார்.
காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் திரு. ராஜேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இப்பயிலரங்கில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவர் திரு. கோபண்ணா, மாவட்டத் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அரசியல் அறிவு, தொண்டர்களின் செயற்பாடு, எதிர்கால தேர்தல் பணிகள் போன்றவை குறித்து விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.
கேமராமேன் குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
