Headlines

உளுந்தூர்பேட்டையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெற்றது.

உளுந்தூர்பேட்டையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஆதிலட்சுமி திருமண மண்டபத்தில் அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள ராஜாத்ரி நேத்ராலயா கண் மருத்துவமனை மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் இரா.குமரகுரு அவர்கள் தலைமையேற்று குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காமராஜ் முன்னாள் எம்எல்ஏ பிரபு நகர கழக செயலாளர் துரை, ஒன்றிய செயலாளர்கள் மணிராஜ், ஆதையூர் சுப்பராயன், ஏகாம்பரம் ராஜசேகரன், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் சாய்ராம், மாவட்ட துணை செயலாளர் பதமாத்மா, மற்றும் ஸ்ரீதர் கிருஷ்ணமூர்த்தி மருத்துவர்கள் காமராஜ், பொன்னரசு,அப்துல் ரசாக், மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முகாமின் சிறப்பம்சங்கள் கண் புரை பரிசோதனை, தூரப்பார்வை,கிட்டப்பார்வை, நிறக் குருடுக்கான பரிசோதனை,கண்ணீர் அழுத்த நோய் மற்றும் விழித்திரை, பரிசோதனை, சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தம் நோயினால் ஏற்படும் கண் பார்வை பாதிப்பு,உள்ளிட்ட இதர கண் வியாதிகளுக்கு இலவசமாக பரிசோதனைகளை செய்து கண் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் கண்டறியப்பட்டு அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து இலவச மூக்கு கண்ணாடியும் வழங்கப்படுகிறது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *