கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் உளுந்தூர்பேட்டை பகுதி வழக்கறிஞர்கள் கட்டணமின்றி செல்ல ஏற்காததால் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்பொழுது நாங்கள் உள்ளூரை சேர்ந்தவர்கள் ஒரு நாளைக்கு இந்த சுங்கச்சாவடியை பலமுறை சென்று வருகிறோம் எங்கள் வாகனங்களில் இருந்து கட்டணம் எடுக்காமல் அனுமதிக்க வேண்டும் எனக் கூறி தொடர்ந்து முற்றுகையிட்டனர் இதனால் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் அப்பொழுது அவர்கள் கோரிக்கை சுங்க நிர்வாகத்திடம் தெரிவிப்பதாக தெரிவித்ததை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர் தொடர்ந்து வாகனங்கள் அனுமதிக்கப்பட்டதால் போக்குவரத்து சரி செய்யப்பட்டது
வழக்கறிஞர்கள் முற்றுகை போராட்டம் காரணமாக உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் விஜயகாந்த்.