திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் பகுதியைச் சேர்ந்த இளங்கோ மகன் வெற்றி(14). இவருடைய தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் தனது தாய் சரிதாவுடன் வசித்து வந்துள்ளார். தாய் வீட்டில் அருகே உள்ள தனியார் உணவகத்தில் வேலை செய்து வருகிறார். வெற்றி ஆம்பூரில் உள்ள கண்கார்டியா மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தனது பழைய குடிசை வீட்டினை இடித்து விட்டு புதிய வீடு கட்ட பழைய வீட்டினை இடிக்கும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நிலையில் நேற்று மாலை பள்ளிக்கு சென்று வந்த மாணவன் தனியாக சுவர் இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சுவர் மாணவன் மீது விழுந்ததால் மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
