சபரிமலை செல்லும் வழியில் ஆலுடா அருகே வன மலையேற்றப் பாதையில் நேற்று வழக்கம் போல் வனத்துறை அதிகாரிகள் பக்தர்களின் உடைமைகளை சோதனை செய்தனர்.
அப்போது மதுரையைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் கஞ்சாவும் ஒரு வகையான போதை காகிதமும் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார் அவரிடம் இருந்த கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரை மாவட்ட செய்தியாளர்: சின்னத்தம்பி
