உலகம் உற்று நோக்கிய ஆண்டு 1924 , பெரிய மனிதர்களுக்கு மட்டும் தான் வரலாறு சொந்தமா.?
சாமானிய மாணவர்களுக்கும் வரலாறு உண்டு.! என தன் பேனா முனையை திருத்தியவர் கலைஞர் அவர்கள். ஜுன் 03 மூன்றாம் தேதி தலைவரின் பிறந்தநாள் குறித்து சிந்தனையாளர் புதிதாக சொன்னதை கலைஞர் நினைவு கூறுகிறார். அப்படி சோ என்ன சொன்னார்.? என்னுடைய முதல் துன்பம் மனிதனாக பிறந்தது தான்., ரூசோ தன் வாழ் நாட்களில் எப்படிப்பட்ட துன்பத்தை அனுபவித்து இருப்பார் என்பது பற்றி அவருடைய மேற்கோளில் இருந்து நாம் கண்டுகொள்ள முடியும். தலைவர் கலைஞர் அவர்கள் ரூசோவின் கருத்தில் மாறுபாடு கொண்டு தவறை சுட்டிக்காட்டிய வைரநெஞ்சன் ஆன்றோரைப் போல் மாறுபட்ட கருத்தை கொண்டவர். செல்வ செழிப்பில் பிறக்காவிட்டாலும் வறுமைக் கடலில் பிறக்காதவர் தான் கலைஞர் அவர்கள்.! நினைத்து நினைத்து குமுரி கதற வேண்டிய நாட்கள் மனித வாழ்க்கையில் பல உண்டு.! அதற்கு அவரும் விதிவிலக்கு அல்ல., அவருடைய பிறப்பு நாள் , திருமண நாள் , முதன் முதலாக பெரியாரை சந்தித்த நாள் , மொழி காக்கும் போரில் முதன் முதலாக சிறை சென்ற நாள் என அனைத்து நாட்களும் மகிழ்ச்சி தரும் நாட்கள் என முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் பதிவு செய்திருக்கிறார். பிறந்தநாள் நட்சத்திரம் நல்லது கெட்டது போன்ற ஆருடங்களில் எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும், நான் பிறந்த ஆண்டில் உலகின் பல்வேறு சம்பவங்கள் நடந்து உள்ளதாக பதிவு செய்திருக்கிறார். 1924 ஆம் ஆண்டு உலக சரித்திரமே காணாத அளவுக்கு அழிவையும் தேக்கத்தையும் ஏற்படுத்திய முதலாம் உலகப்போர் நடந்த ஆண்டு, அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் திருக்குவளை என்ற கிராமத்தில் முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மூன்றாவது குழந்தையாக பிறந்தவர் நமது கலைஞர் அவர்கள் தான்.
பிறந்த ஆண்டின் உலக சரித்திரத்தை அவர் பேசும்போது…
காந்தியடிகள் இந்திய விடுதலைப் போரில் நுழைந்த ஆண்டு, காந்தியடிகள் காங்கிரஸ் தலைமை ஏற்ற ஆண்டு, பெரியாரை வைத்தியம் வீரராக்கிய ஆண்டு, திரு.வி.க தொழிற்சங்கத்தை தொடங்கிய ஆண்டு, துருக்கியில் கமால்பாஷாவின் சீர்திருத்தம் துவங்கிய ஆண்டு, புரட்சி வீரன் லெனின் மறைந்த ஆண்டு, ஸ்டாலின் பதவிக்கு வந்த ஆண்டு, பல்கேரியா சிறையில் ஹிட்லர் மெயின் கேம்ப் என்ற புத்தகத்தை எழுதிய ஆண்டு, காவிரி ஒப்பந்தமும் அமல்படுத்தப்பட்ட ஆண்டு என பல்வேறு வரலாற்று தகவல்களை
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் வரிசைப்படுத்தி உள்ளார்.
மீண்டும் சந்திப்போம்…
தென்றல் ஆ.சேகர்
திராவிட கருத்தியல் ஆய்வாளர்
உடுமலைப்பேட்டை