நாகர்கோவில், நவம்பர் 7:
தமிழக மக்கள் “பெருந்தலைவர்” என போற்றும் காமராஜர் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த காலத்தில், பசுவதைத் தடைச் சட்டத்தை எதிர்த்ததற்காக 1966ம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி டெல்லியில் ஆர்எஸ்எஸ் மற்றும் அப்போது பாரதிய ஜனசங்கம் (இன்றைய பாஜக) இணைந்து அவரது இல்லத்தை தீவைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது.
அந்த கொடூர நிகழ்வை நினைவுகூரும் வகையில் இன்று நவம்பர் 7 “கருப்பு தினம்” எனக் கடைப்பிடிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நாகர்கோவில் காமராஜர் மணிமண்டபத்தில் பெருந்தலைவர் காமராஜரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் உறுதிமொழி நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநில பால்வளத்துறை அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் கலந்து கொண்டு உறுதி மொழி எடுத்தார்.
மேலும் கூட்டணி கட்சித் தலைவர்கள், திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களும் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்ததாவது:
“பெருந்தலைவர் காமராஜர் நாட்டின் ஒற்றுமைக்கும் மதச் சமரசத்திற்கும் அடித்தளமிட்டவர். ஆனால் பாசிச சக்திகள் மதத்தின் பெயரில் மக்களை பிரித்து, உண்மையான பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தை திருப்பி விட முயல்கின்றன. இதற்கு எதிராக நாம் ஒற்றுமையுடன் போராட வேண்டும்,” என்றார்.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.
