மதுரை ஜெ.ஏ.எம். மகளிர் அரபிக் கல்லூரி சார்பாக மகபூப்பாளையம் கல்லூரி வளாகத்தில் 2 கோடி ஸ்லவாத் சமர்ப்பண விழா, உலக மக்கள் துன்பங்கள் நீங்க சிறப்பு பிரார்த்தனை மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரியின் நிறுவனர் & தாளாளர் பள்ளப்பட்டி மௌலானா மௌலவி S.M.முஹம்மது அல்தாப் அலி உலவி தலைமையேற்றார், கல்லூரியின் கண்காணிப்பாளர் S.A. முஹம்மது அலி முன்னிலை வகித்தார் , கல்லூரியின் பேராசிரியர் மௌலவி ஹாபிழ் காரி மு.முஹம்மது முஹ்யித்தீன் தாவூதி இமாம், மதுரை-சிவகாசி ஷாஃபி முஸ்லிம் ஜமாஅத் பள்ளிவாசல்.TPKரோடு, மதுரை கிராத் ஓதினார், கல்லூரியின் தலைமை ஆசிரியை ஆலிமா அஃப்ஸலுல் உலமா M.ஜூலைகா பர்வீன் அல்தாபிய்யு வரவேற்புரை வழங்கினார்.
மௌலவி அலாவூதீன் ஆலீம் இமாம், ஜூம்ஆ பள்ளிவாசல் வலையபட்டி,மதுரை அவர்கள் துவக்கவுரை ஆற்றினார், விழாவிற்கு மெளலானா மெளலவி அல்ஹாபிழ் M.அஹமது பைசல் மக்தூமி இமாம் ஜூம்ஆ பள்ளிவாசல் மாட்டுத்தாவணி, மதுரை , மற்றும் மெளலானா மெளலவி H அன்சர் ஹுசைன் சிராஜி இமாம், ஜூம்ஆ பள்ளிவாசல் தினமனி நகர் மதுரை ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள், விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக கண்ணியமிகு வலையயபட்டி M.பாவா மைதீன் , கண்ணியமிகு M.முஹம்மது இக்பால் துனைச் செயலாளர், ஜும்ஆ பள்ளிவாசல் வலையப்பட்டி ஆகியோர் கலந்து கொண்டார்கள், நன்றியுரை கல்லூரியின் பேராசிரியர் முபல்லிகா M.சபினா கூற நிகழ்ச்சி நிறைவுற்றது.
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
