செப் 22 கன்னியாகுமரி –
கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி அமுதா ராணி அவர்களின் பதவியை மதுரை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கழக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மூத்த வழக்கறிஞர் திருமிகு N. தளவாய் சுந்தரம் (BSc.BL) அவர்கள் தலைநகர் டெல்லிக்கு நேரில் சென்று வழக்கை தொடர்ந்து, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தடை உத்தரவை பெற்றார்.
இதன் மூலம், திருமதி அமுதா ராணி அவர்கள் தேரூர் பேரூராட்சி மன்ற தலைவராகத் தொடர்ந்து பதவி வகிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் தீவிரமான விவாதம் நிலவுகிறது.
குமரி மாவட்ட செய்தியாளர் – பாவலர் ரியாஸ்.
