திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் வீடற்றோர் தங்கும் விடுதியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு சார்பாக உணவு வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றன.
இந்நிகழ்வின் தலைமையாக மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்
அஸ்வின் பிரபாகர் மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு அமைப்பாளர் ரபீக் மைதீன்
துணை அமைப்பாளர் சேக் அலாவுதீன் ஆகியோர் தலைமையில் வீடற்றோர் தங்கும் விடுதியில் உள்ள அனைவருக்கும் இலவச உணவு வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றன.
மேலும் இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் சௌந்தர பாண்டியன் பாலசமுத்திரம் பேரூர் செயலாளர் காளிமுத்து லோகநாதன் ராமகிருஷ்ணன் வீரமணி மற்றும்
பாபு ரகுமான்
ராஜா முகமது இதயத்துல்லா பாலமுருகன்
இமாம் ராஜா கருணாநிதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
பழனி செய்தியாளர் : நா.ராஜாமணி