திருப்பூர் மாவட்டம்; காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரியின் (KIT), பெருமையுடன் மகாத்மியம்’25 என்ற பண்பாட்டு மற்றும் கல்வி விழா சிறப்பாக நடைபெற்றது.
வரவேற்புரை ஆற்றிய முதல்வர் டாக்டர் ராம்குமார் எஸ். மகாத்மியம் 25 நிகழ்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, மதிப்புகளை வளர்த்தல், பாரம்பரியத்தை கௌரவித்தல் மற்றும் கூட்டு சாதனைகளை கொண்டாடும் ஒரு தளமாக இதை சுட்டிக்காட்டினார் தொடர்ந்து காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் மஹேந்திர கவுடா ஆர்.வி. அவர்கள், இளம் மனங்களை வலுப்படுத்த கல்வியின் பங்கை வலியுறுத்தி. தலைமைத்துவம், படைப்பாற்றல் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்க கல்வி நிறுவனங்களின் பொறுப்பை நினைவூட்டினார். அதன்பின், இரண்டாம் ஆண்டு AI…
