திருநெல்வேலியில், உலக ஆறுகள் தினம் கொண்டாட்டம்! தாமிரபரணி நதிக்கரையில் மரக்கன்றுகள் நட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்திய, தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கத்தினர்!
திருநெல்வேலி, செப். 28:- “உலக ஆறுகள் தினம்” ஆண்டுதோறும், செப்டம்பர் மாதம் நான்காவது வாரத்தில், கொண்டாடப்படுகிறது. ஆறுகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டு வதையும், அவற்றின் தூய்மை மற்றும் பாதுகாப்பு ஆகியன குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும், இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையில், திருநெல்வேலியில் உள்ள, தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கத்தினர், தங்களுடைய சார்பு அணியான, “நம் தாமிரபரணி” சார்பாக, இன்று (செப்டம்பர். 28) திருநெல்வேலி சந்திப்பு மணிமூர்த்திஸ்வரம், “தாமிரபரணி” படித்துறையில், புங்கை, பூவரசு, வேம்பு உள்ளிட்ட,…
