Headlines

நீலகிரி மாவட்ட கூட்டுவார விழா.. கூட்டுறவு தயாரிப்பு பொருட்கள் விற்பனை மேளா..

நீலகிரிமாவட்ட கூட்டுவார விழா.. கூட்டுறவு தயாரிப்பு பொருட்கள் விற்பனை மேளா..

72-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 16.11.2025 ஞாயிற்றுக்கிழமை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்டங்களிலும் வாகனங்கள் மூலம் கூட்டுறவு தயாரிப்பு பொருட்கள் விற்பனை மேளா நடைபெற்றது.

உதகமண்டலத்தில் அமைந்துள்ள நீலகிரி கூட்டுறவு நிறுவன விற்பனை வாகனமானது பொக்காபுரம் மற்றும் அதனை பகுதியில் விற்பனையினை மேற்க்கொள்ள மண்டல இணைப்பதிவாளர் மரு. தே. சித்ரா அவர்களால் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது.

அதே போல நீலகிரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை வாகனம் கோக்கால் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியிலும், கோத்தகிரி கூட்டுறவு பண்டகசாலை வாகனம் கோத்திமுக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியிலும், தூதுர்மட்டம் கூட்டுறவு பண்டகசாலை வாகனம் மூப்பர்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியிலும், உதகமண்டல கூட்டுறவு பண்டகசாலை அதன் தலைமை இடம் ஆகிய இடங்களில் விற்பனை மேளா நடைபெற்றது. ஊரகப் பகுதிகளில் கூட்டுறவு தயாரிப்பு பொருட்களை கொண்டு சேர்க்கும் முக்கிய நோக்கத்தினை அடிப்படையாக கொண்டும் மக்கள் கூட்டுறவு தயாரிப்பு பொருட்களை குறைவான விலையில் பெற்று நிறைவான பயனடைய வேண்டும் ஆகியவற்றை அடிப்படைய கொண்டு இந்த விற்பனை மேளா நடைபெற்றது.

இதில் ஏராளமான பொதுமக்கள் கூட்டுறவு தயாரிப்பு பொருட்களை பெற்றுக் கொண்டனர்,. இந்நிகழ்ச்சியில் துணைப்பதிவாளர்கள் திரு.அஜித் குமார் திரு. கமல் சேட், நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் திரு ரா. கௌரிசங்கர், கூட்டுறவு சார்பதிவாளர் திரு. யோகேஸ்வரன், கூட்டுறவு சங்க பணியாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *