போதைப் பொருட்களை தடுப்பதற்கு காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது. நாட்டிலேயே தமிழ்நாட்டு காவல் துறை தான் போதைப்பொருள் தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இன்றைய கால கட்டத்தில் போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு மிக முக்கியமானது. பள்ளி மாணவர்களில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரையும் போதைப் பொருள் விழிப்புணர்வு சென்று சேர வேண்டும்.
போதை பொருள் விழிப்பு தினத்தினை முன்னிட்டு நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின்படி B1 உதகை நகர மத்திய காவல் நிலையம் G1 காவல் நிலையம் நகர காவல் நிலையங்கள் இணைந்து உதகை நகர காவல் துறை துணை கண்காணிப்பாளர் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரின் வழிகாட்டுதல்படி உதகை நகர மத்திய காவல் நிலைய ஆய்வாளர் உதவி ஆய்வாளர்கள் போக்குவரத்து காவல்துறையினர் G1 காவல் நிலைய ஆய்வாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் காவல் துறையினர் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட மனித சங்கிலி பேரணியானது உதகை ஏடிசி சுதந்திர திடலில் இருந்து பிக் ஷாப் வரை நடைபெற்றது
இதில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி என்.எஸ்.நிஷா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ,மாவட்ட துணை காவல்துறை கண்காணிப்பாளர் மணிகண்டன், பி.1 காவல்நிலைய ஆய்வாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், எங்கேயாவது போதைப்பொருள் விற்பது தெரியவந்தால் மாணவர்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், போக்குவரத்து விதிமுறைகளை மதித்து நடப்பதன் மூலம் தான் விபத்துக்களை தவிர்க்க முடியும்.இளைய சமூகத்தினர் தான் அத்தகைய விழிப்புணர்வை வீட்டில் உள்ளவர்களுக்கும், சமூகத்தில் உள்ளவர்களுக்கும் ஏற்படுத்த முடியும் என மாணவ.மாணவிகளுக்கும் பொதுமக்களுக்கும் காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
