Headlines

வாணியம்பாடியில் நகைக்கடை உரிமையாளர் கடன் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை.

வாணியம்பாடியில் நகைக்கடை உரிமையாளர் கடன் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை.

வாணியம்பாடி,அக்.21- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மிட்னாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் நகைக்கடை அதிபர் தினகரன் (47). இவருக்கு கோமதி என்ற மனைவியும், இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இவர் வாணியம்பாடி சி.எல் சாலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக லட்சுமி ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் இவர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அதிகமாக கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இவருக்கு கடன் சுமை அதிகமானதால் ஏற்கனவே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அவரது உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றியுள்ளனர். மன அழுத்தத்தில் இருந்து மீளாமல் இருந்த தினகரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகைக்கடை அருகே வாடகை வீடு ஒன்றை எடுத்து அதில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் இன்று தினகரன் வாடகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாணியம்பாடியில் நகைக்கடை அதிபர் கடன் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நகை கடை அதிபர்கள் மற்றும் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *