பழனி அருகே காவலப்பட்டியில் 6 மாதங்களாகக் குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள் – ரூ.1000 கொடுத்து தண்ணீர் வாங்கும் அவலம்!
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த காவலப்பட்டி ஊராட்சியில், கடந்த ஆறு மாதங்களாக நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, காவலப்பட்டி ஊராட்சியின் 2-வது வார்டில் (சிவ சத்தியா வீடு முதல் ராமசாமி கமலம்மாள் வீடு வரையிலான பகுதி) கடந்த ஆறு மாதங்களாகக் குடிநீர் விநியோகம் முற்றிலுமாகத் தடைபட்டுள்ளது. வழக்கமாக பொந்துபுளி கிராமத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலிருந்து குழாய் மூலம் கொண்டுவரப்படும் நீர், காவலப்பட்டியில் தேக்கப்பட்டு விநியோகிக்கப்படும். ஆனால், கடந்த சில மாதங்களாக…
