திருநெல்வேலி,நவ.20:- தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் [DGP] உத்தரவுப்படி, மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், ஒவ்வொரு வாரமும் புதன் கிழமைகளில், அந்தந்த மாநகர காவல் ஆணையர் அலுவலகங்களில், நடைபெற்று வருகிறது.
அதன்படி, பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியிலுள்ள, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், இன்று [நவ.20] மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், மொத்தம் 12 பேர் கலந்து கொண்டு, மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனாவிடம், புகார் மனுக்களை அளித்தனர். புகார் மனுக்களை, நேரடியாக பெற்றுக்கொண்ட, மாநகர காவல் ஆணையர், ” பெறப்பட்டுள்ள புகார் மனுக்கள் மீது, சரியான நடவடிக்கைகள் மேற்கொண்டு, உரிய தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும்!” என்று, மனுதாரர்களிடம் “உறுதி” அளித்தார். இந்த முகாமில், காவல் துணை ஆணையர்கள் (மேற்கு) V.கீதா, (கிழக்கு) S.விஜயகுமார் ஆகியோரும், கலந்துகொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்