நாகர்கோவில், ஆகஸ்ட் 20:
இன்று (20.08.2025) காலை சுமார் 7.30 மணி முதல் 7.40 மணிக்குள், நாகர்கோவில் மாநகரம் வெட்டூர்நிமடம் – பார்வதிபுரம் சாலை, கட்டயன்விளை பகுதியில் சாலை விபத்து ஒன்று ஏற்பட்டது.
இந்த விபத்தில் அடையாளம் தெரியாத ஓர் ஆண் நபர் கடுமையாக காயமடைந்துள்ளார். இவர் திங்கள் சந்தை பகுதியைச் சேர்ந்தவர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த நபரின் பின்னுத் தலைவர் பகுதியில் தீவிர காயம் ஏற்பட்டதோடு, ஒரு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
போலீசார் சம்பவத்தைப் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேமராமேன் ஜெனீருடன் குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
