குமரலிங்கம் : டிசம்பர் 06.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்துள்ள குமரலிங்கம் பேரூராட்சி பெருமாள் புதூர் அணைக்கட்டு குமணன் துறை பகுதியில், மழை உடுமலையின் 160 வது தொடர் வாரம் , 180 வது நிகழ்வாக தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை மற்றும் மழை உடுமலை இணைந்து ஒரு லட்சம் பனை விதைகள் விதைக்கும் தொடர் நிகழ்வு நடைபெற்றது.

இதில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி தலைமையில், பொள்ளாச்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுமலை தமிழிசை சங்கம் செயலர் சண்முகசுந்தரம் முன்னிலையில் நடைபெற்றது.




நிகழ்ச்சியில் மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன், வியாபாரிகள் சங்கம், கிழக்கு அரிமா சங்கம், உடுமலை அரிமா சங்கம், சென்ட்ரல் அரிமா சங்கம், நியூ ராயல் அரிமா சங்கம், சர்வேட்டர் அரிமா சங்கம், மடத்துக்குளம் அரிமா சங்கம், கொழுமம் அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் ,கேலக்ஸி ரோட்டரி சங்கம் ,தேஜஸ் ரோட்டரி சங்கம், ஸ்டார் ரோட்டரி சங்கம், ரோட்டரி இன்னர் வீல் சங்கம், அபெக்ஸ் சங்கம் , வாசவி சங்கம், ஹீலிங் ஹாட்ண்ஸ், உடுமலை தமிழிசை சங்கம், டெக் மகேந்திரா நிறுவனம், தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை, சங்கராமநல்லூர் பேரூராட்சி, மடத்துக்குளம் பேரூராட்சி, குமரலிங்கம் பேரூராட்சி, பாரதி மெட்ரிகுலேஷன் பள்ளி, விவேகானந்தா வித்யாலயா பள்ளி, எஸ் வி ஜி மகளிர் பள்ளி ,ஜிவிஜி மகளிர் பள்ளி ,அரசு ஆண்கள் கலைக்கல்லூரி ,வித்யாசாகர் கலை கல்லூரி, பொள்ளாச்சி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, மற்றும் உடுமலை மடத்துக்குளம் சார்ந்த அரசு பள்ளிகள், பிரியா பாரா மெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட் மற்றும் உடுமலை ஆம்புலன்ஸ் சர்வீஸ், சமூக ஆர்வலர்கள் இயற்கை ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டனர்.

மழை விடுமுறை உடுமலையின் சுற்றுப்பகுதிகளில் பசுமைக்கான முன்னோட்டத்தை கையில் எடுத்து மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டு வருகிறது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்ட மேலும் ஒத்துழைத்தால் இன்னும் ஒரு மலையை அழகான நகரமாக மாற்றுவதில் ஐயம் ஏதும் இல்லை.
மழை உடலை உடுமலையின் சுற்றுப்பகுதிகளில் பசுமைக்கான முன்னோட்டத்தை கையில் எடுத்து மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டு வருகிறது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்ட மேலும் ஒத்துழைத்தால் இன்னும் ஒரு உடுமலையை அழகான நகரமாக மாற்றுவதில் ஐயம் ஏதும் இல்லை.