மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி பரிவார் டெய்ரீஸ் அன்லைட் லிமிடெட் மற்றும் PDA அறக்கட்டளையின் பெயரில் திரட்டப்பட்ட நிதி சம்பந்தமான ஆவணங்கள் சிபிஐ யின் நோடல் அதிகாரியிடம் நேரில் மனுக்களை ஒப்படைக்க பாதிக்கப்பட்ட பொது மக்கள் நலன் கருதி இந்த உத்தரவு வழங்கப்பட்டது.
இது தொடர்பாக கடநத நான்கு நாட்களாக பாதிக்கப்பட்ட பொது மக்கள் பெருந்திரளாக விருதுநகர் தாலுகா அலுவலகம் மத்திய புலனாய்வுத் துறை மதுரை அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார்
இன்ஸ்பெக்டர் கீதா நாச்சியார் டி. எஸ். பி தண்டபாணி டி. எஸ். பி கணேசன் மற்றும் மத்திய புலனாய்வு துறை அதிகாரி முத்து கண்ணன் (சிபிஐ) ஆகியோர் முன்னிலையில் சிறந்த முறையில் பாதிக்கப்பட்ட பொது மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது. மேலும் 02.06.25 தேனி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் வாங்கப்படுகிறது. மனுக்களை சமர்ப்பிக்க வேண்டிய நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை கொடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களது மனுக்களை தவறாது நேரில் வந்து நோடல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டுகிறோம். இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
