தென்காசி, பிப் – 12
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் தென்காசி மாவட்ட இரண்டாவது மாநாடு குற்றாலத்தில் நடைபெற்றது. இதில் தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 48 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
குற்றாலம் தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த மாநாட்டு நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட தலைவர் சு பார்த்தசாரதி தலைமை தாங்கினார். மாவட்ட இணைச் செயலாளர் வ.சுப்புராஜ் அஞ்சலி தீர்மானங்களை வாசித்தார். மாவட்டத் துணைத் தலைவர் இரா. இராமநாதன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாவட்ட செயலாளர் வே. வெங்கடேஷ் துவக்க உரை ஆற்றினார் மாவட்ட செயலாளர் பீ.இராஜசேகரன் சங்கத்தின் வேலை அறிக்கைகளை சமர்ப்பித்தார். மாவட்ட பொருளாளர் மா.மாணிக்கவாசகம் வரவு செலவு அறிக்கையினை தாக்கல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து மாவட்டத் துணைத் தலைவர்கள் சு. கோபி, சிக்கந்தர் பாவா, சி. பழனி, மாவட்ட இணைச் செயலாளர்கள் வே. கண்ணன், ந. ஆறுமுகம், கு. முத்துப்பாண்டி, மாவட்ட தணிக்கையாளர்கள் கி ராதாகிருஷ்ணன் மு ஜெயலட்சுமி இ மாடசாமி மாநில செயற்குழு உறுப்பினர் ஆர் கணேசன் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தோழமை சங்கங்களின் நிர்வாகிகள் சீ.கருப்பையா, ஆ. சுந்தரமூர்த்தி நாயனார், ஞா. துரை டேனியல், க. துரைசிங், பா. கோவில் பிச்சை, க. கங்காதரன், என். வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் மா. விஜயபாஸ்கர் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் வெ. சண்முகசுந்தரம் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து நிறைவுரை ஆற்றினார்.
முடிவில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் தென்காசி மாவட்ட இணைச்செயலாளர் அ.அன்பரசு அனைவருக்கும் நன்றி கூறினார்.
இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு;-
தமிழக முதலமைச்சர் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் கூறியபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். ஊராட்சி செயலாளர்களை அரசு ஊழியர்களாக வகைப்படுத்த வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். பணியில் இருந்து ஓய்வு பெற்ற அனைத்து ஊராட்சி செயலாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க அரசு உத்தரவிட வேண்டும்
தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் புதிய ஊராட்சி ஒன்றியங்களை ஏற்படுத்த வேண்டும்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை செயல்படுத்த வேண்டும். தென்காசி மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையை அறிவிக்க வேண்டும்.
தென்காசி- திருநெல்வேலி நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தென்காசி ஆசாத் நகர் முதல் இலஞ்சி வரையிலான புறவழிச் சாலை பணியினை செயல்படுத்தவும், சங்கரன்கோவில் சுற்றுச்சாலை அமைக்கவும், தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தூய்மை பணியாளர்களுக்கு மஸ்தூரகளுக்கு வழங்கும் ஊதியத்துக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை செம்மையாக செயல்படுத்திட புதிய வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் தனி கட்டமைப்பினை ஏற்படுத்த வேண்டும்.
ஊராட்சி பகுதிகளில் பணி புரியும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் மேல்நிலை நீர் துவைக்க தொட்டி இயக்குபவர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். மக்கள் நல பணியாளர்களை ஊராட்சி நிர்வாகத்துடன் இணைத்து வரி வசூலிப்பாளர் பணிகளை ஒதுக்கீடு செய்து அவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும்.
அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 60 இலிருந்து 58 ஆக குறைத்து இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும். ஒன்றிய அரசு சாதிவாரி கணக்கெடுப்பினை நடத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட 48 தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.