திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த ஏராளமான ஜோடிகள் இலவச திருமணத்திற்கு அபிராமி அம்மன் கோவிலில் விண்ணப்பித்திருந்தனர் இதில் 14 ஜோடிகளில் பரிசீலிக்கப்பட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் படி இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரின் வழிகாட்டுதலில்
இலவச தங்கத் தாலி உள்பட பல்வேறு வகையான சீர்வரிசைகள் வழங்கி ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு உணவளித்து திருமணம் கொலாளமாக நடைபெற்றது.
திண்டுக்கல் நகரின் மத்தியில் பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் திருத்தலம் உள்ளது இந்த திருத்தலம் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழமை வாய்ந்த கோவிலாகும் இந்தக் கோவிலில் 14 ஜோடிகளுக்கு இலவச திருமணம் அது விமர்சையாக நடைபெற்றது திருமண ஜோடிகளுக்கு 4 கிராம் தங்கத் தாலி கட்டில் மெத்தை பீரோ கைக்கடிகாரம் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கோவில் நிர்வாகம் சார்பில் சீர்வரிசையாக வழங்கப்பட்டது.
திருமண ஜோடிகளுக்கு ஆடை முதல் உறவினர்கள் மற்றும் அவர்களது நண்பர்களுக்கு உட்பட மூன்று வேலை உணவு என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது இந்தத் திருமணத்தில் அபிராமி அம்மன் கோவில் குருக்கள் வேத மந்திரங்கள் முழங்க ஹோமம் வளர்க்கப்பட்டு திருமணம் வெகு கோலாகலமாக நடைபெற்றது இந்த திருமண நிகழ்வில் இணை ஆணையர் கார்த்திக் திண்டுக்கல் அறங்காவலர் குழு நியமனத் தலைவர் சுப்பிரமணி தாடிக்கொம்பு கோவில் அறங்காவலர் தலைவர் விக்னேஷ் பாலாஜி உதவி ஆணையர் மற்றும் அபிராமி அம்மன் கோவில் செயல் அலுவலர் தங்க லதா சீனிவாச பெருமாள் கோவில் செயல் அலுவலர் யுவராஜ் அபிராமி அம்மன் கோவில் அறங்காவலர்கள் வீரக்குமார். நிர்மலா, மலைச்சாமி. உள்பட ஏராளமானூர் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்தனர் மேலும் அபிராமி அம்மன் கோவிலின் சார்பில் அபிராமி அம்மன் திருவுருவப்படம் மற்றும் ஸ்ரீ சக்கரா நாணயம் திருமண ஜோடிகளுக்கு வழங்கப்பட்டது இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் : பாலசிந்தன்