தமிழ்நாடு முதலமைச்சர் அன்புத் தளபதி மாண்புமிகு திரு. எம். கே. ஸ்டாலின் அவர்களை இன்று சென்னையில் முன்னாள் அமைச்சர் மற்றும் தமிழ்நாடு உணவு ஆணையத் தலைவர் திரு. சுரேஷ் ராஜன் அவர்கள் நேரில் சந்தித்தார்.
இந்த சந்திப்பில், மீன்வலை உற்பத்தியில் தற்போது நடைமுறையில் உள்ள ஜிஎஸ்டி வரி தொடர்பாக முக்கிய கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மீன்வலை உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட இந்த மனுவில், மீன்வலை உற்பத்தியில் பயன்படுத்தப்படும் “நூலுக்கு தனியாகவும், அதனைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் வலைக்கும் தனியாகவும் விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி, உற்பத்தியாளர்களுக்கு மிகப்பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
இதனால் உற்பத்தி செலவு அதிகரித்து, மீனவர்கள் சமூகத்திற்கும் பொருளாதார சுமை அதிகரிக்கிறது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, நூலுக்கும் வலைக்கும் விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை முற்றிலும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கத்தின் கோரிக்கையை சுரேஷ் ராஜன் முதலமைச்சரிடம் முன்வைத்தார்.
முதலமைச்சர் மனுவைப் பெற்றுக்கொண்டு, அதனை விரிவாக ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பில் மீன்வலை உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்ட தமிழக விடியல் நிருபர் – பாவலர் ரியாஸ்.
