மதுரை அரசரடி பகுதியில் தேவகி ஸ்கேன் எதிர்புறத்தில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் மதுரை டு தேனி மெயின் ரோட்டில் உள்ள குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தினசரி ஆயிரக்கணக்கான லிட்டர் குடிதண்ணீர் வீணாகி வெளியேறி வருகிறது . குடிநீர் வீணாகி வெளியேறி வருவதால் ரோடு முற்றிலும் சேதம் அடைந்து காணப்பட்டு வருகிறது ரோடு சேதம் அடைந்தது காணப்படுவதால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் குண்டு, குளியுமாக உள்ள ரோட்டில் விபத்தில் சிக்கி காயங்கள் ஏற்படுகிறது .
மதுரை மக்களின் வாழ்வாதாரமான குடிநீரை பாதுகாக்கவும், வாகன ஓட்டிகள் விபத்தில் இருந்து பாதுகாக்கவும் குண்டு, குழியுமான ரோட்டை சரி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர் கார்த்திக் மதுரை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை செய்தியாளர் சின்னத்தம்பி
