Headlines

புத்தளம் அரசு தொடக்கப் பள்ளியில் 80-வது ஆண்டு விழா:கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டம்!

புத்தளம் அரசு தொடக்கப் பள்ளியில் 80-வது ஆண்டு விழா:கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டம்!

கன்னியாகுமரி, மார்ச் 8:

கன்னியாகுமரி மாவட்டம், புத்தளம் அரசு தொடக்கப் பள்ளியின் 80-வது ஆண்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை (06.03.2026) மாலை 4.30 மணியளவில் பள்ளி வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவிற்கு ராஜாக்கமங்களம் வட்டாரக் கல்வி அலுவலர் திரு. இசக்கியப்பன் M.Sc., B.Ed., அவர்கள் தலைமை தாங்கினார்.

பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக (PTA) தலைவர் திரு. B. பிரேம் ஆனந்த், பள்ளி மேலாண்மைக் குழு (SMC) தலைவர் திருமதி. G. அஜிதா மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக, பள்ளி ஆசிரியை திருமதி. P. பிளாரன்ஸ் மேரி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

அதனைத் தொடர்ந்து, பள்ளியின் தலைமையாசிரியர் திரு. M. இராமச்சந்திரன் அவர்கள் இந்த கல்வியாண்டிற்கான சிறப்பான ஆண்டறிக்கையை வாசித்தார்.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக, பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கிப் பாராட்டப்பட்டனர்.

பின்னர், பள்ளிப் குழந்தைகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று அனைவரை யும் வெகுவாகக் கவர்ந்தது.

முடிவில், ஆசிரியை திருமதி. E. சேது ராமலெட்சுமி அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.

இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன் பாவலர் ரியாஸ்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *