Headlines

திண்டுக்கல்லில் ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்க முப்பெரும் விழா கோலாகலம்: 666 ஓட்டுநர்களுக்கு இலவச சீருடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி அசத்தல்!

திண்டுக்கல்லில் ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்க முப்பெரும் விழா கோலாகலம்: 666 ஓட்டுநர்களுக்கு இலவச சீருடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி அசத்தல்!

திண்டுக்கல்:

திண்டுக்கல்லில், திண்டுக்கல் டவுன் ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்கத்தின் 3-ஆம் ஆண்டு விழா, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச சீருடை வழங்கும் விழா மற்றும் சங்கத் தலைவர் கே. ரெத்தினத்தின் 66-வது பிறந்தநாள் விழா ஆகிய முப்பெரும் விழா மிகக் கோலாகலமாக நடைபெற்றது.

திண்டுக்கல் சலங்கை ஒலி நடனப்பள்ளி மாணவிகளின் சிறப்பான வரவேற்பு நடனத்துடன் விழா இனிதே தொடங்கியது. முனைவர் காதர் பாட்சா அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

இவ்விழாவிற்கு திண்டுக்கல் மாநகர ஆட்டோ ஓட்டுநர்கள் நல அறக்கட்டளை நிறுவனர் ஜி. சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். நாகல் நகர் சௌராஷ்டிரா சபை தலைவரும், திண்டுக்கல் சேம்பர் ஆஃப் காமர்ஸ் துணைத்தலைவருமான SSK. அருள்ஜோதி முன்னிலை வகித்தார்.

ரூ. லட்சக்கணக்கில் நலத்திட்ட உதவிகள்:

அறக்கட்டளையின் தலைவர் கே. ரெத்தினம் அவர்களின் 66-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரும் அவருடைய புதல்வருமான திண்டுக்கல் மாநகராட்சி 17-வது வார்டு மாமன்ற உறுப்பினர் KKR. வெங்கடேஷும் இணைந்து பிரம்மாண்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

  • 666 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச சீருடைகள்,
  • 66 ஆண்களுக்கு வேட்டி-சட்டைகள்,
  • 66 பெண்களுக்கு சேலைகள்,
  • 10 சாலையோர வியாபாரிகளுக்கு நிழற்குடைகள் எனப் பல்வேறு நலத்திட்ட உதவிகள் ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்:

விழா மேடையில் ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் அறக்கட்டளை தலைவர் கே. ரெத்தினம் கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாடினார்.

தொடர்ந்து, அறக்கட்டளையின் செயலாளர் மற்றும் தமிழ்நாடு கால்பந்தாட்டக் கழகத் தலைவர் எஸ். சண்முகம், இணைச்செயலாளர் எம். திபூர்சியஸ், பொருளாளர் எஸ்.என். பாஸ்கர் மற்றும் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கப் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

50% கல்விக் கட்டணச் சலுகை – ஆட்டோ ஓட்டுநர்கள் மகிழ்ச்சி:

விழாவில் ஆட்டோ ஓட்டுநர்கள் பேசுகையில், “தலைவர் கே. ரெத்தினம் அவர்களின் முயற்சியால், திண்டுக்கல் ஜி.டி.என். கல்விக் குழுமக் கல்லூரியில் ஆட்டோ ஓட்டுநர்களின் குழந்தைகளுக்குக் கல்விக் கட்டணத்தில் 50% சலுகை வழங்கப்பட்டு வருகிறது” என்று நெகிழ்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் பகிர்ந்து கொண்டனர்.

குலுக்கல் முறையில் சிறப்புப் பரிசுகள்:

விழாவிற்கு வருகை தந்தவர்களில் 66 நபர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குச் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிறைவாக, ஒருங்கிணைப்பாளர் ஆட்டோ டிரைவர் L. திருப்பதி நன்றி கூறினார். விழாவில் கலந்துகொண்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உட்பட 1,000-க்கும் மேற்பட்டோருக்கு இரவு உணவு விருந்து வழங்கப்பட்டது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *