நீலகிரி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் உதகையில் மாவட்ட அவை தலைவர் கே.போஜன் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர் கே. எம். ராஜு அரசு தலைமை கொரடா கா ராமச்சந்திரன் பா மு முபாரக் முன்னிலையில் நடைபெற்றது
மாவட்ட திமுக அலுவலகம் கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட திமுக அவை தலைவர் கே. போஜன் தலைமையில் நடைபெற்றது. நீலகிரி மாவட்ட பொறுப்பாளர் கே.எம். ராஜூ அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
தமிழ்நாடு அரசின் தலைமை அரசு கொறடா கா. ராமச்சந்திரன் மற்றும் உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் பா.மு. முபாரக் ஆகியோர் கலந்து கொண்டு முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினர்.
இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் ரவிக்குமார், லட்சுமி, தமிழ்செல்வன், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர். இளங்கோவன், EXPO- செந்தில், ரங்கராஜ், திராவிட மணி, எஸ்.காசிலிங்கம், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஷ் குமார், மாநில விளையாட்டை துணைச் செயலாளர் பா.மு. வாசிம் ராஜா, மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் அன்வர்கான், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் வீரபத்திரன், மோகன் குமார், ராஜா, அமிர்தலிங்கம், செல்வம், காளிதாசன், உதயதேவன், ராஜேந்திரன், பில்லன், தொரை, சதக்கத்துல்லா, கருப்பையா, நகர கழக செயலாளர்கள் எஸ். ஜார்ஜ், இளஞ்செழியன், ராமசாமி, மு. சேகரன், ஒன்றிய கழக செயலாளகள் கே.ஆர்.காமராஜ், பிரேம்குமார், பீமன், லாரன்ஸ், பரமசிவன், நெல்லை கண்ணன், லியாகத் அலி, சிவானந்த ராஜா, சுஜேஷ், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் இமயம் சசிகுமார், விவேகானந்தன், கோமதி, Dr.பவிஷ், செல்வராஜ், வேலன், ஜெயந்தி ராம்குமார், ராமச்சந்திரன், ராஜா, காந்தல் ரவி, வெங்கடேஷ், ரஹ்மத்துல்லா, சீனி உமாநாத், சிவசுப்பிரமணியம், ஜெயக்குமார், பேரூர் கழகச் செயலாளர்கள் நடராஜ், முத்து, காளிதாஸ், பிரகாஷ், உதயகுமார், சதீஷ், சுந்தர்ராஜ், சுப்பிரமணி, செல்வ ரத்தினம், பரமேஸ் குமார், சஞ்சீவ் குமார், மார்ட்டின், நகராட்சி தலைவர்கள் வாணிஸ்வரி, சிவகாமி, பரிமளா, சுசீலா, பேரூராட்சி தலைவர்கள் கலியமூர்த்தி, கௌரி, ஜெயக்குமாரின், சித்ராதேவி, ஹேமா மாலினி, பேபி சத்தியவாணி, பங்கஜம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் வினோத்குமார், பாபு நாகராஜ், பத்மநாதன், முரளிதரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
தீர்மானம் .1
திமுக தலைவரும், தமிழக முதல் மு க ஸ்டாலின்ளின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர, ஒன்றிய, பேரூர் கிளை கழக அமைப்புகளில் திமுக கொடி ஏற்றியும், இனிப்புகள் வழங்கியும், ஆதரவற்றோர் இல்லங்களில் அறுசுவை உணவுகள் வழங்கியும், ஏழை எளிய மக்கள் பெரிதும் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் நிகழ்ச்சிகளை நடத்துவதோடு விளையாட்டுப் போட்டிகள் திமுக அரசின் சாதனைகளை படித்தொட்டி இயங்கும் கொண்டு சேர்த்திடும் வகையில் தெருமுனைப் பிரச்சாரங்கள் போன்ற நிகழ்ச்சிகளையும் மார்ச் மாதம் முழுவதும் சிறப்புடன் நடத்திட ஏற்பாடுகள் செய்து திமுக தலைவர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்ளின் 72-வது பிறந்தநாளை வெகு விமர்சியாக மாவட்டம் முழுவதும் கொண்டாடிட நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து திமுக தோழர்களுக்கும் இக்கூட்டதின் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
தீர்மானம் 2 : வாழ்த்து தீர்மானம்:-
நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளராக கே.எம்.ராஜூ திமுக உயற் நிலை செயல்திட்டக்குழு பா.மு.முபாரக் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாவட்ட கழகம் மனம்நிறைந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, இவர்களை நியமித்த தலைவர், தமிழக முதல்வர் க்கும், திமுக பொதுச்செயலாளர் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்க்கும், திமுக இளைஞர் அணி செயலாளர் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் க்கும், திமுக துணை பொதுச்செயலாளர், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா க்கும் இக்கூட்டத்தில் நன்றி தெரிவிக்கபட்டது.
தீர்மானம் 3 : 2026 சட்டமன்ற தேர்தல்:-
எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகை, கூடலூர், குன்னூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்புமிக்க வெற்றிப்பெற ஒவ்வொரு ஒவ்வொரு திமுக தோழர்களும் உறுதியேற்று தொடர்ந்து பணியாற்றுவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்ட இறுதியில் உதகை நகர திமுக செயலாளர்கள் எஸ். ஜார்ஜ் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியுரை கூறினார்.