மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில், செல்வகணபதி டிவிஎஸ் நிறுவனத்தின் சார்பில் பொங்கல் திருநாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழா செல்வகணபதி டிவிஎஸ் நிறுவனரும் உரிமையாளரும் ஆகிய உயர்திரு பழனிதங்கவேல் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
பொங்கல் பண்டிகை ஒட்டி புதிய வாகனங்களை விழாக் கால சலுகையில் வாகனங்கள் வாங்க மூன்றுமாவடி கே.புதூர் செல்வகணபதி டிவிஎஸ் கிளையில் வாடிக்கையாளர்கள் வந்து வாங்கிச் சென்று மகிழ்ச்சி அடைந்தனர்.
புதியப் பானையில் பொங்கல் வைத்து சூரியபகவானுக்கு நன்றி செலுத்தி, தமிழர் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை நினைவுகூரும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்ற து. ஊழியர்கள் அனைவரும் பாரம்பரிய உடைகள் அணிந்து கலந்துகொண்டு, பொங்கல் வைத்து வழிபட்டனர். இதனை தொடர்ந்து
உயர்திரு பழனிதங்கவேல் அவர்கள் உரையாற்றும்போது, தொழிலாளர்கள் ஒருமைப்பாடு, உழைப்பின் பெருமை மற்றும் பாரம்பரிய விழாக்களின் முக்கியத்துவம் குறித்து கூறினார். மேலும், இவ்வாறான விழாக்கள் ஊழியர்களிடையே நல்லிணக்கம், சகோதரத்துவம் மற்றும் மகிழ்ச்சியை வளர்க்கும் எனக் குறிப்பிட்டார்.
இவ்விழாவில் செல்வகணபதி டிவிஎஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் கலந்து கொண்டு, பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். விழாவின் நிறைவாக அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டு நிகழ்ச்சி சிறப்பாக நிறைவுற்றது.
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
