திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கீரனூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .
இதன் அடிப்படையில் பழனி காவல் துணை கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் உத்தரவின் பெயரில் ,கீரனூர் காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார், தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்பொழுது கோதை மங்கலத்தைச் சேர்ந்த அம்ஜத் கானிடமிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 16 கிலோ அளவுள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் இதற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து இது பற்றி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
பழனி செய்தியாளர் : நா.ராஜாமணி.