உடுமலை சிவசக்திகாலனியைச் சேர்ந்த ஜமால் ஷேக் என்பவரது மகன் இஸ்மாயில் (வயது 34).அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.இவர் நேற்று மதியம் கணியூரிலிருந்து உடுமலை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு டவுன் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.இந்த பஸ் மடத்துக்குளம் நால்ரோடு பகுதிக்கு வந்தபோது உடுமலையையடுத்த மருள்பட்டி பகுதியைச் சேர்ந்த குப்புசாமி என்பவரது மகன் கார்த்திகேயன் (வயது 34) பஸ்சில் ஏறியுள்ளார்.அப்போது திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த சுத்தியலை எடுத்து கண்டக்டர் இஸ்மாயிலை சரமாரியாக தாக்கியுள்ளார்.மேலும் கீழே விழுந்தவரை அடித்து உதைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அருகிலிருந்தவர்கள் இஸ்மாயிலை மீட்டு அருகிலுள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.இந்த சம்பவத்தால் கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கடும் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து இஸ்மாயில் அளித்த புகாரின் பேரில் மடத்துக்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில்,கார்த்திகேயனின் மனைவியுடன் கடந்த சில மாதங்களாக இஸ்மாயில் போனில் பேசி பழகி வந்துள்ளார்.இதனால் மனைவி மீது சந்தேகம் கொண்ட கார்த்திகேயனுக்கு இஸ்மாயில் மீது ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.எனவே இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரிய வந்தது.இதனைத் தொடர்ந்து கார்த்திகேயனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.அரசு பஸ் கண்டக்டர் தாக்கப்பட்ட சம்பவத்தால்மடத்துக்குளம் நால்ரோடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
உடுமலை நிருபர் : மணி