ஆக் 28, கன்னியாகுமரி :
குமரி மாவட்டம், நித்திரவிளை அருகே கிராத்தூர் பகுதியை சேர்ந்த சுனில் ராஜ்குமார் (45) என்பவர் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.
கடந்த 18ஆம் தேதி பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த டெம்போ மோதியதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்தார்.
காயமடைந்த அவர் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நேற்று (புதன்கிழமை) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர் ரியாஸ்.
