திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் குமரலிங்கம் பேரூராட்சியில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் படி, வருவாய் கோட்டாட்சியர் குமார் வழிகாட்டுதலின் படி, வட்டாட்சியர் குணசேகரன் தலைமையில், தனி வட்டாட்சியர் கௌரிசங்கர், குமரலிங்கம் பேரூராட்சி செயல் அலுவலர் கந்தசாமி, பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா பானு ஆகியோர் முன்னிலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் 14/10/25 அன்று நடைபெற்றது..
முகாமில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 923 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.. இதில் 52 விண்ணப்பங்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.. நிகழ்வில் துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
