Headlines

அடல் பிஹாரி வாஜ்பாய் நூற்றாண்டு விழாவையொட்டிஅங்கன்வாடி குழந்தைகளுக்கான விளையாட்டு & கலைநிகழ்ச்சி – பரிசுகள் வழங்கல்

அடல் பிஹாரி வாஜ்பாய் நூற்றாண்டு விழாவையொட்டி அங்கன்வாடி குழந்தைகளுக்கான விளையாட்டு & கலைநிகழ்ச்சி – பரிசுகள் வழங்கல்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பாஜக அரசு தொடர்பு பிரிவு சார்பில், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, நாகர்கோவிலில் உள்ள பூச்சாத்தம் குளம் அருகேயுள்ள அங்கன்வாடி மையத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அறநெறி வளர்ச்சி, ஒற்றுமை, தேசிய உணர்வு ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், அங்கன்வாடி குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பின்னர் வெற்றி பெற்ற சிறுவர்–சிறுமிய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைவர் திரு. கோபகுமார், மாநில செயலாளர் திருமதி மீனாதேவி, சட்டமன்ற அமைப்பாளர் திரு. எஸ்.பி. தேவ், மண்டல தலைவர்கள் திரு. சுனில் சதீஷ், அரசு தொடர்பு பிரிவு நிர்வாகிகள் மாவட்டத் தலைவர் விஜயகுமார், துணைத் தலைவர் ராஜசேகரன், செயலாளர்கள் சுப்பிரமணியம், சதீஷ், மாதவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் நாகர்கோவில் மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் முத்துராமன், கவுன்சிலர்கள் திரு. ஐயப்பன், திரு. ரமேஷ், மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் சந்திரசேகர், மாவட்ட செயலாளர் ராஜன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

தமிழக விடியல் குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *