கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாகர்கோவில் மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக, புரட்சியாளர் பாபாசாகிப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை ஒட்டி, அண்ணன் திருமாவளவன் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் நாகர்கோவில் மாநகர மாவட்ட சிறுத்தைகள் அனைவரும் ஒன்றிணைந்து நாகர்கோவில் மாநகர மாவட்ட செயலாளர் அல் காலித் தலைமையில் மாலை அணிவித்து பாசிசத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்:
நெல்லை – கன்னியாகுமரி மண்டல துணைச் செயலாளர் பகலவன், அரசு ஊழியர் ஐக்கிய பேரவை மாநில துணைச் செயலாளர் ஈழவளவன், பொறியாளர் அணி மாநில துணைச் செயலாளர் ஸ்டெர்லின் பாக்கியதாஸ், மாவட்ட துணைச் செயலாளர் கிஷோர், மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் தொல்காப்பியன், வடக்கு மண்டல பகுதி செயலாளர் சதீஷ்பாபு, இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் ஹமீது பயாஸ், மருத்துவர் அணி மாவட்ட அமைப்பாளர் டாக்டர் வசந்தகுமார், மகளிர் விடுதலை இயக்க மாவட்ட துணைச் செயலாளர் செல்வி, தெற்கு மண்டல பகுதி துணைச் செயலாளர் ராஜன், முன்னாள் நகரச் செயலாளர் அசோக், ஊடக துணைச் செயலாளர் கருப்பு ரெஜி நாகராஜன், மேற்கு மண்டல பொறுப்பாளர் சுபாஷ், வடக்கு மண்டல பொருளாளர் அன்றனி ராஜ், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை வடக்கு மண்டல அமைப்பாளர் கணேஷ், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை தெற்கு மண்டல அமைப்பாளர் தௌசிப், வேல்முருகன், லோக் ஜனசக்தி மாவட்ட அமைப்பாளர் பேராசிரியர் தர்மகண்ணு, மேலும் பல தோழர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.
