வாணியம்பாடி,ஜூலை.2- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கீழ் ஈச்சம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சங்கீதா. இவர் கணவனை இழந்து மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

இவர் தனியார் காலனி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று பணிக்கு சென்று இருந்த போது எதிர்பாராத விதமாக அவரது வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டி, தையல் இயந்திரம், உடைமைகள், சமையல் பொருட்கள் என அனைத்தும் தீயில் இருந்துள்ளது.
இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்திருந்த நிலையில் தீயணைப்புத் துறையினர் வராததால் அருகாமையில் இருந்த தண்ணீர் டிராக்டர் மூலம் தீயை அணைத்தனர்.
மேலும் சங்கீதாவிற்கு தகவல் அளித்த நிலையில் நேரில் வந்த சங்கீதா வீட்டின் பூட்டை உடைத்து பார்த்தபோது அனைத்தும் தீயில் கருகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சம்பவம் குறித்து உமராபாத் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
