திருநெல்வேலி,ஜன.8:-
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து “கரையிருப்பு” பகுதியை சேர்ந்த ஓட்டல் தொழிலாளி இசக்கி பாண்டி [வயது.36]. இவர், தன்னுடைய மனைவி சுப்புலட்சுமியுடன், கடந்த சனிக்கிழமை [ஜன.4] நள்ளிரவு 12-30 மணியளவில், மானூர் வழியாக, கரையிருப்புக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, எதிர்பாராமல் விபத்து ஏற்பட்டது. இதில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட கணவனும், மனைவியும் சாலையில் சுயநினைவின்றி கிடந்தனர்.
இதே நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். கணவர் இசக்கி பாண்டியை பரிசோதித்த, அரசு மருத்துவமனை டாக்டர்கள், அவர் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக தெரிவித்தனர். அத்துடன் இசக்கி பாண்டிக்கு, மூளையில் கசிவு அதிகமாக இருப்பதையும் எடுத்துக் கூறினர். தொடர்ந்து மூளையின் செயல்பாட்டினை பரிசோதித்ததில், அது செயல்பாட்டில் இல்லை! என்றும் தெரியவந்தது.
அதன் பின்பு, இசக்கி பாண்டியின் உடல் உறுப்புகளான இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் திசுக்களான கருவிழிகள், தோல் ஆகியவற்றை தானமாக வழங்கிட, முன்வந்தனர். அதனைத் தொடர்ந்து “தானம்’பெறப்பட்டது. பின்பு, செவ்வாய் கிழமை [ஜன.7] “உடற்கூறு ஆய்வு” கொள்ளப்பட்டது. இன்று [ஜன.8] காலையில், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் [DEAN] தலைமையில், மருத்துவ மனை டாக்டர்களின் இறுதி மரியாதையுடன், இசக்கி பாண்டியின் உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.