அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காத, தன்னிச்சையாக துணை வேந்தர்களின் மாநாட்டினை நடத்தும் ஆளுநர். R.N. ரவி – யை கண்டித்தும், இம்மாநாட்டில் பங்கேற்க வந்த துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கரை கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் DYFI அமைப்பினர் ஊட்டி, ராஜ்பவன் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநில செயற்குழு உறுப்பினர் தோழர். அர்ஜுன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.சி பி ஐ எம் தாலுகா செயலாளர் நவீன்சந்திரன் மாவட்ட குழு உறுப்பினர் மனோஜ்குமார் வாழ்த்துரை வழங்கினர்.
இப்போராட்டத்தில் DYFI நீலகிரி மாவட்ட தலைவர் தோழர். மணிகண்டன், திருப்பூர் மாவட்ட செயலாளர் தோழர். பாலமுரளி, கோவை மாவட்ட பொருளாளர் தோழர். தினேஷ் ராஜா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்தனர்.
