Headlines

தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக உலக மகளிர் தின விழா திண்டுக்கல்லில் கொண்டாடப்பட்டது.

தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக உலக மகளிர் தின விழா திண்டுக்கல்லில் கொண்டாடப்பட்டது.

மார்ச் 08 திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத் தலைவர் தளபதி உத்தரவின் படி பொதுச் செயலாளர் ஆனந்த் Ex.MLA வாழ்த்துக்களுடனும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் எல் .தர்மா தலைமையிலும் திண்டுக்கல் மாநகரத் தலைவர் மற்றும் தளபதி விஜய் பயிலகத்தின் ஒருங்கிணைப்பாளர் சை.சையது அசாருதீன் சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு மாபெரும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான விருது வழங்கப்பட்டது இதில் கென்னடி மெட்ரிகுலேஷன் பள்ளி அருள் ஜோதி வள்ளலார் பள்ளி செவன்த்டே மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்களுக்கான விருது வழங்கப்பட்டது.

இதில் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள். முத்துலட்சுமி ஹரி ஏற்பாட்டில் தூய்மை பணியாளர்களுக்கான சேலை குடம் வழங்கப்பட்டது மேலும் கௌதம், யாக்கோப், நிக்கத்சதாம், லோகநாதன், டோனி, சேகர், அண்ணாதுரை, ரகுமணிகண்டன், அஜ்மல் ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும் தளபதி விஜய் பயிலக மாணவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நாடகங்களும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது இதில் பயிலக ஆசிரியை சங்கீதா கவியரசு பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பேசினார் மற்றும் ஆனந்த், பிரிதம், மணிகண்டன், சேவியர், ஆகாஷ், ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டு டோன் டச் என்கின்ற வார்த்தையை முன்னுறுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது பயிலக மாணவர்கள் ராணி வேலுநாச்சியார் அஞ்சலை அம்மாள் வேடமிட்டு பேசினார்கள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டார்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *