உடுமலை, எலையமுத்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது அரசு கலைக்கல்லூரி. இங்கு 2000 க்கும் மேற்பட்ட மாணவ , மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்லூரியின் எதிரில் உள்ள அரசு விடுதியில் வெளியூரை சேர்ந்த 100 மாணவிகள் தங்கி படிக்கின்றனர். ஏற்கனவே இதே விடுதியில் பணியாற்றி வந்த சமையல்காரர் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதிலாக புதிய சமையல்காரர் நியமிக்கப்படவில்லை. இதனால் மாணவிகளே சமைத்து சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுசம்பந்தமாக விசாரணை செய்ததில் தெரியவந்ததாவது, விடுதியில் தற்போது 62 மாணவிகள் தங்கியுள்ளனர். அதில், குறிப்பிட்ட சில மாணவிகள் மட்டும் இரவு நேரங்களில் வெளியே சென்று வெகுநேரமாகியும் வருவதில்லை எனவும் , படிப்பு விசயத்தில் கவனம் செலுத்துவது இல்லை என்பதாக பல்வேறு குற்றாச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் விடுதி காப்பாளர் தேவிகா சம்பந்தப்பட்ட மாணவிகளை படிப்பில் கவனம் செலுத்த அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் விடுதியில் சமையல் ஆட்கள் இல்லாததால் , உதவியாளர்கள் சமையல் பணியை செய்து வருகின்றனர். விடுதியில் வழங்கப்படும் உணவுகளை பிடிக்காததால், ஒருசில மாணவிகள் வெளியில் ஆர்டர் செய்து சாப்பிடுவது வழக்கம். விடுதியில் வழங்கப்படும் உணவுகளை சாப்பிடுமாறு காப்பாளர் கூறியுள்ளார். இதன் காரணமாக குறிப்பிட்ட சில மாணவிகள் மட்டும் விடுதி காப்பாளர் தேவிகா என்பவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியதாக தெரியவருகிறது.
இதனை அடுத்து கடந்த 25ஆம் தேதி போராட்டமும் நடைபெற்றது. நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக விடுதி காப்பாளர் தேவிகா இடமாற்றம் செய்யப்பட்டார். படிக்கும் மாணவிகளை கட்டுப்பாட்டுடன் , பாதுகாப்புடன் வழி நடத்தும் விடுதி காப்பாளர் மீது தவறான புகார்களையும் , வேண்டுமென்றே பழி சுமத்தி நினைத்த காரியத்தை சாதித்த மாணவிகள் , படிப்பில் சாதிக்க ஆர்வம் காட்டுவதாக தெரியவில்லை.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் முறையான விசாரணை செய்து உண்மை தன்மையை அறிந்து அதன் பிறகு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அனைத்து மாணவிகளிடம் விசாரணை செய்யாமல் ஒருசில மாணவிகளின் புகார்களை எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுப்பது சரியானது அல்ல, ஒருசில மாணவிகளின் தவறான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ள விடுதி காப்பாளர், கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு உதவிகளை செய்து மாணவிகளை நல்வழிப்படுத்தி வரும் , விடுதி காப்பாளர் மீது புகார் அளிப்பது வேதனையளிக்கிறது.
இதுபோன்ற தவறான நடவடிக்கைகளால் நேர்மையான அரசு பணியாளர்களும் தங்களது பணியை சரிவர செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. எனவே இதுபோன்ற தவறுகள் இனியும் தொடராமல் மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என்பது கூறுகிறது இந்த செய்தி தொகுப்பு.!
நமது நிருபர்.