Headlines

விழுப்புரம் வட்டார துளுவ வேளாளர் சங்க 14 ஆம் ஆண்டு விழா..

விழுப்புரம் வட்டார துளுவ வேளாளர் சங்க 14 ஆம் ஆண்டு விழா..

விழுப்புரம் வட்டார துளுவ வேளாளர் சங்க 14 ஆம் ஆண்டு விழா விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள ASG திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

வட்டார தலைவர் M. வடிவேல் தலைமை தாங்கினார், வட்டார துணைத் தலைவர் ஆ. அருணகிரி, வட்டார இணைச் செயலாளர் A. தமிழ்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரச் செயலாளர் ந. சூரியமூர்த்தி வரவேற்புரையாற்றினார்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் விழுப்புரம் மாவட்டத்தின் மூத்த வழக்கறிஞருமான கு.பா. பழனியப்பன் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

மாநில பொதுச் செயலாளர் கல்பட்டு வ.ராதா மறைந்த முன்னாள் தலைவர் மற்றும் பொருளாளர் ஆகியோர் இருவரின் உருவப்படங்களை திறந்து வைத்தார்.

மறைந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன மக்களை அடையாளம் கண்டு, அவர்களை முழுமையாக ஒருங்கிணைத்து, இன வளர்ச்சிக்கென எதிர்கால திட்டங்களை வகுத்து, அவர்களின் கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் வளர்ச்சி, பொது முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பிற்காக முழு முனைப்போடு செயல்படுவது.

விழுப்புரம் நகரத்தின் மையப் பகுதி அல்லது திருச்சி – சென்னை புறவழிச் சாலையில் துளுவ வேளாளர் திருமண மண்டபம் கட்டுவது எனவும், துளுவ வேளாளர் திருமண தகவல் மையத்தின் சேவைகளை அனைத்து பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்வது.

அந்தந்த பகுதிகளுக்கென கிளைச் சங்கங்களை உருவாக்கி, மாவட்ட மற்றும் மாநில சங்கத்தினை வலிமை பெறச் செய்வது எனவும், பின் தங்கியுள்ள துளுவ வேளாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது.

விழுப்புரம் வட்டாரத்தின் சார்பாக சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற உள்ள 7-வது மாநில மாநாட்டில் பெருந்திரளாக கலந்து கொள்வது.

தமிழ்நாடு அரசை துளுவ வேளாளர் இனத்தினை மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்த்து, 10.5 % தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்துவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

துளுவ வேளாளர் இனத்தினை தனியாக அடையாளப்படுத்தி அரசாணை வெளியிட்டதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இவ்விழாவில் மாநிலப் பொருளாளர் அரங்க. தெய்வமணி, அரசு வழக்கறிஞர் M.S. நடராஜன், புதுவை மாநிலத் தலைவர் மு. மோகன், புதுவை மாநிலப் பொருளாளர் இரா. ரவி, கம்பன் கழகத் தலைவர் Ln. G. தனபால், ASG திருமண மண்டப உரிமையாளர் கோபி (எ) கோவிந்தராஜ், ஜோதி மரவாடி உரிமையாளர் N.K.B.செந்தில்குமரன் வழக்கறிஞர் S.சண்முகம், சங்கராபுரம் முன்னாள் தலைவர் P.அழகேசன், சங்க காப்பாளர் கல்பட்டு ப. கல்விராயன், முண்டியம்பாக்கம் Ln L.ராஜவேல், கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர், Ln.MJF. N.நடராஜன், கள்ளக்குறிச்சி மாவட்ட துணைத் தலைவர் G. பாலகிருஷ்ணன், நெய்வேலி சங்கத்தலைவர் G.ராஜகோபால், நெய்வேலி சங்கப் பொருளாளர் S. எழில் வேலவன், சங்கராபுரம் சங்கச்செயலாளர் N.கண்ணன், விழுப்புரம் வட்டார சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள், நன்னாடு N.கலியபெருமாள் வளவனூர் P.ராம்குமார், விழுப்புரம் A.C.குமார், G.V. சத்யநாராயணன், விக்கிரவாண்டி S.ரமேஷ், இணைச் செயலாளர் A.சேகர், முதல் குரல் ஆசிரியர் டாக்டர் கு.பா.ரவீந்திரன் ஆகியோர் உட்பட பலரும் திரளாக கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: க.நந்தகுமார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *