செப் 22 கன்னியாகுமரி –
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா அவர்கள், இன்று (22.09.2025) கோணம் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியை துவக்கி வைத்து உரையாற்றினார்.
இந்த பயிற்சியின் மூலம் கட்டுமானத் தொழிலாளர்கள் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்திக் கொண்டு, புதிய வேலை வாய்ப்புகளைப் பெறுவதோடு, வாழ்வாதாரத்தை முன்னேற்றிக் கொள்ளும் வகையில் பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்ட செய்தியாளர் – பாவலர் ரியாஸ்.
