ராஜாகமங்கலம் துறையில் CFLI – ஹீல் இணைந்து சிறப்பான நிகழ்வு.
ராஜாகமங்கலம், கன்னியாகுமரி மாவட்டம்:

இயற்கை மற்றும் கடல் பாதுகாப்பு குறித்த மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கன்னியாகுமரி மாவட்டம் ராஜாகமங்கலம் துறை பகுதியில் CFLI மற்றும் ஹீல் நிறுவனம் இணைந்து தெருமுனை கூட்டம் நடத்தின.
இந்த நிகழ்வில் இயற்கை வளங்களின் பாதுகாப்பை எடுத்துரைக்கும் ஒளிலாட்ட பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கலைப்பாடல்கள் பாடப்பட்டு, பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்வில் ஹீல் நிறுவனத்தின் தலைவர் சிலுவை வஸ்தியன், CFLI கலைமாமணி பழனியாபிள்ளை, ராஜேந்திரன், ஊர் பெரியவர்கள் மற்றும் ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இயற்கை வளங்களை பாதுகாக்கும் பொறுப்புணர்வு ஒவ்வொரு குடிமகனிடமும் உருவாக வேண்டும் என்பதே இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக அமைந்தது.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.
