ரேக்ளா பந்தய விழாவில் கலந்து கொண்ட தயாநிதிமாறன் எம்.பி
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குமரலிங்கம் பேரூராட்சி , சாமராயபட்டியில் விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் நடந்த ரேக்ளா போட்டியில் கழக விளையாட்டு மேம்பாட்டு அணியின் செயலாளர் தயாநிதி மாறன் எம்.பி பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருப்பூர் தெற்கு மாவட்டம் விளையாட்டு அணி சார்பில் மாநிலம் தழுவிய ரேக்ளா போட்டிகள் நேற்று நடைபெற்றன. போட்டியை திருப்பூர் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் திரு.இரா.ஜெயராமகிருஷ்ணன் EX.MLA , பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டியில் 200 மற்றும் 300 மீட்டர் பந்தய தூரங்களில் 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற காளை வண்டிகளுக்கு கழக விளையாட்டு மேம்பாட்டு அணியின் செயலாளர் தயாநிதிமாறன் எம்.பி பரிசுகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன், மாவட்ட கழக பொருளாளர் கே.எம்.முபாரக்அலி, மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் எம்.ஏ.ஷாகுல்அமீது, விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை செயலாளர் கார்த்திக், உடுமலை நகர கழக செயலாளர் வேலுச்சாமி, உடுமலை நகரமன்ற தலைவர் எம்.மத்தீன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் நிர்வாகிகள் ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.