செப் 10 கன்னியாகுமரி –
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் அரசு ஊழியர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், போட்டிகளில் பங்கேற்கும் காவல்துறையினரை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
இன்று நடைபெற்ற கிரிக்கெட், கபடி, இறகுப்பந்து உள்ளிட்ட போட்டிகளில் காவல்துறை ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பல்வேறு வெற்றிகளை பெற்றனர்.
“எங்கள் வெற்றிக்கு காரணம், எஸ்.பி. மருத்துவர் ஸ்டாலின் அவர்கள் வழங்கிய முழு ஒத்துழைப்பும் ஊக்கமும் தான்” என காவலர்கள் தெரிவித்தனர்.
குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
