நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா I. P. S. அவர்களின் தலைமையில், நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபு , ADSP சௌந்தரராஜன், ADSP மணிகண்டன், எஸ்பி ஆய்வாளர் சுஜாதா மற்றும் காவலர்கள் குழு, இவர்களுடன் நகராட்சி தூய்மை பணியாளர்கள் இணைந்து , புகழ்பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்கா நுழைவு வாயிலிருந்து, சேரிங்கராஸ் காந்தி சிலை வரை மாஸ் கிளீனிங் பணியில் ஈடுபட்டனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவலர்கள் குழுவின் இந்த சமூக பணிக்கு, பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.