வாணியம்பாடி, அக்.14- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மனிதநேய மக்கள் கட்சி இளைஞர் அணி சார்பில் போதைக்கு எதிராக இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணிக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முன்னா(எ) பர்க்கத்துல்லா தலைமை வகித்தார். நகர தலைவர் எஸ்.தப்ரேஸ் அஹமத் அனைவரையும் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர் வி.ஆர்.நஜீர் அஹமத், இஸ்லாமிய பிரச்சார பேரவை மாநில பொருளாளர் சி.கே.சனாவுல்லா, இளைஞரணி மாநில துணை செயலாளர் இம்ரான் ஆகியோர் கலந்து கொண்டு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
பேரணி துத்திப்பட்டு பகுதியில் தொடங்கி ஜலால் ரோடு, மோட்டுக்கொல்லை,பஜார் வீதி, காதர்பேட்டை, வி.ஏ.கரீம் ரோடு வழியாக சென்று நேதாஜி சாலையில் முடிவடைந்தது.
பேரணியில் மாவட்ட, நகர, ஓன்றிய, கிளை நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் என 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு போதைக்கு எதிராக கோஷங்களை எழுப்பி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
முடிவில் மமக மாதனூர் ஓன்றிய தலைவர் எம்.ஏ.ஹாதி பாஷா நன்றி கூறினார்.