திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த சாமிநாதபுரம் அருகே நல்லூரில் சதாசிவம் என்பவர் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து மில்லில் வேலை செய்து வந்த மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பாபுலால் மகன் சோனு (எ) ராஜ்சர்பா (29) என்பவர் வீட்டில் விற்பனைக்காக 2 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தார். இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் சோனு (எ) ராஜ்சர்பாவை கைது செய்து அவரது வீட்டில் இருந்த விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்