1500 ஆசிரியர் பயிற்சி ஆசிரியர்களை விருப்பத்தின் அடிப்படையில் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் மாநிலம் தழுவிய கால வரலாற்ற உண்ணா நிலை அறப்போராட்டத்தை மேற்கொள்வோம் என வளமைய பட்டதாரி ஆசிரியர்ஙள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் ராஜ்குமார் பேட்டி
திண்டுக்கல் தனியார் மஹாலில் அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் ஐம்பெரும் விழா மாநில தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் 1500 பயிற்சி ஆசிரியர்களை விருப்பத்தின் அடிப்படையில் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக பணியமர்த்த வேண்டும். பணி மாறுதல் கலந்தாய்வு போது தேவை பணியிடங்களை காண்பித்து கலந்தாய்வினை நடத்திட வேண்டும்.
பணி மாறுதலில் பட்டதாரி ஆசிரியர்களாக செல்லும் ஆசிரியர் பயிற்சிகளுக்கு வரும் பொது மாறுதல் கலந்தாய்வில் முடிவு அளித்திட வேண்டும்.
பணமாறுதல் கலந்தாய்வு முடிந்த பின்னர் பணியில் உள்ள ஆசிரியர் பயிற்சிகளுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உடனடியாக மாநில அரசு நிறைவேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் முதல்வர் மற்றும் அமைச்சர்களை சந்திக்க உள்ளோம். எங்கள் கோரிக்கைகளை நிறைவேறாத பட்சத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது
அதிலும் தீர்வு காணப்படவில்லை மாநிலம் தழுவிய கால வரலாற்ற உண்ணா நிலை அறப்போராட்டத்தை மேற்கொள்வோம் என பேட்டி அளித்தார். உடன் மாநில பொதுச் செயலாளர் தேவபாலன் மாநில பொருளாளர் செந்தில் வேல்முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பேட்டி:
திரு.ராஜ்குமார் (மாநிலத் தலைவர்,அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம்)